மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவு: தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால் அணைகளுக்கான நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு வினாடிக்கு 16,556 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 16,204 கனஅடியாக குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் பாசனத்தேவை குறைந்துவரும் நிலையிலும் அணைக்கு வரும் தண்ணீரை அணை மற்றும் சுரங்க மின்நிலையத்தின் வழியாக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையின் 8 மதகு மூலமாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 12 நாட்களாக 120 அடியில் நீடித்து வருகிறது.

Related Stories: