கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் விபரங்கள் இல்லை: நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை பதில்..!!

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் விவரங்கள் இல்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாத தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது கடந்த ஜூன் மாதத்தில் இருந்து படிப்படியாக மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை குறைதலும், கூடுதலுமாகவே இருந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை, உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் அபிர் ரஞ்சன்தாஸ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் விவரங்கள் ஒன்றிய அரசிடம் இல்லை. ஜூலை 23 வரை மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்பட 5,25,997 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

Related Stories: