ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பெட் பாட்டில்களை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்: தெற்கு ரயில்வேக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கொள்கையை சமர்ப்பிக்க ஒன்றிய-மாநில அரசுகளுக்கு ஜூலை 28ம் தேதி வரை அவகாசம் வழங்கியது.

அப்போது,  பிளாஸ்டிக்கை ஒழிக்க தெற்கு ரயில்வே எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை பார்த்த நீதிபதிகள்,  தெற்கு ரயில்வேக்கு பாராட்டு தெரிவித்ததுடன், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பெட் பாட்டில்கள் பயன்பாட்டை ஒழிப்பதை உறுதி செய்ய எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: