லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய போக்குவரத்து துணை கமிஷனர் சஸ்பெண்ட்

சென்னை: போக்குவரத்து துறை துணை கமிஷனர் நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் துணை கமிஷனராக இருந்தவர் சி.நடராஜன். இவர், அலுவலக உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமிக்கு புகார் வந்தது. ஐஜி பவானீஸ்வரி உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. திடீரென நடராஜனின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் மொத்தம் ரூ.35 லட்சம் பணம் சிக்கியது. அதைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை துணை கமிஷனராக இருந்த நடராஜன், நெல்லைக்கு மாற்றப்பட்டார். ஆனாலும், நடராஜன் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை ஆணையர் நிர்மல்ராஜுக்கு லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தது. அதை தொடர்ந்து, நடராஜனை சஸ்பெண்ட் செய்து உள்துறைச் செயலாளர் பணீந்திரரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், சஸ்பெண்ட் காலத்தில், அவர் தலைமையிடத்தில் இருக்க வேண்டும். அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் வெளியூர் செல்லக்கூடாது.

Related Stories: