பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்வு.. மேலும் பலர் கவலைக்கிடம்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச் சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கடந்த 24-ம் தேதி கள்ளச்சாராயம் சட்டவிரோத விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு அடுத்தடுத்து வாந்தி, கண் எரிச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பாஜக ஆளும் முக்கிய மாநிலமாக கருதப்படும், குஜராத் மாநிலத்தில் முழுவதும் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Related Stories: