அதிமுக வங்கிக்கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், ஓ.பன்னீர்செல்வம் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம், ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனருக்கு எழுதியுள்ள 4 பக்க கடிதத்தில், ‘அதிமுக பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை, அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்; தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி இதுவரை நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறேன்.

இதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளேன். எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவு வரும் வரை அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை ரிசர்வ் வங்கி முடக்க வேண்டும். கடந்த 11ம் தேதி நடந்த சட்டவிரோத ெபாதுக் குழு கூட்டத்தில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்ததாக தெரியவந்தது. அதில் அதிமுக கட்சி தொடர்பான வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என்றும், காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது. என்னைக் கேட்காமல் வங்கி வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன். கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளன. எனவே, அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: