சென்னையில் நாளை திட்டமிட்டபடி சமூக பாதுகாப்பு மாநாடு: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அறிவிப்பு

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் தலைமையகத்தில் மாநில துணை தலைவர் ஹாலித் முகமது நேற்று அளித்த ேபட்டி: பாஜவின் 8 வருட ஆட்சியில் நம் தேசத்தின் அடிப்படையாக இருக்கக் கூடிய மக்களாட்சி தத்துவம், ஜனநாயகம், அரசியலமைப்பு சாசன சட்டம், நீதி பரிபாலன முறை போன்றவை கடும் பிரச்னையை சந்தித்து வருகிறது. தேசத்தின் அடிப்படை தத்துவங்களை மாற்றி பாசிச சர்வாதிகார கொள்கையை  ஆளும் பாஜ அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜனநாயக அமைப்புகளும் உரிமைக்காக போராடக்கூடிய தலைவர்களும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க கூடிய அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

எனவே தான்  தேசத்தின் அனைத்து அடிப்படை தத்துவங்களும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சென்னையில்  ஜூலை 24ம் தேதி சமூக பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இதற்காக முறையாக அனுமதி கேட்டு அனுமதி கடிதம் சென்னை மாநகர காவல்துறையிடம் வழங்கப்பட்டது. மாநாட்டு நிகழ்ச்சிக்கு  அனுமதியை இப்பொழுது வரை தரவில்லை. மாநாட்டிற்கு அனுமதி தர மறுப்பது ஏன், தீர்மானித்தபடி ஜூலை 24ம் தேதி (நாளை) சமூக பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: