2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு அகற்றப்படும் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஆவேசம்!!

கொல்கத்தா : 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் ஆளும் பாஜக கூட்டணியை ஆட்சியில் இருந்து வெளியேற்ற நடைபெறும் தேர்தல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் 1993ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் நடத்திய பேரணியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை நினைவுக் கூறும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21ம் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் திரண்ட மக்களுக்கு மத்தியில் உறையற்றிய மம்தா பேனர்ஜி, பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.

நாட்டை கொள்ளையடிக்க முதலாளிகளுக்கு இடம் கொடுத்த மோடி அரசு, ஏழைகள் வாழ்க்கையுடன் விளையாடுவதாக குற்றம் சாட்டினார். அரிசி, தயிர், பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது வரி விதித்து மக்களை பட்டினி கிடைக்க மோடி அரசு திட்டமிடுவதாக அவர் சாடினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் சரியான பதிலடி கொடுக்கும் என்றார் மம்தா பேனர்ஜி. மேலும் பாஜகவை கண்டு திரிணாமுல் காங்கிரஸ் பயப்படவில்லை என்றும் ஒன்றிய விசாரணை அமைப்புகளை கண்டு திரிணாமுல் காங்கிரஸ் பயப்படாது என்றும் மம்தா காட்டமாக தெரிவித்தார். தியாகிகள் தின பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பொதுக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் லட்சக்கணக்கில் வருகை தந்தனர். 

Related Stories: