பாஸ்போர்ட் விசாரணையில் சென்னை போலீசாரின் பணி சிறப்பு: மண்டல அதிகாரி பாராட்டு

சென்னை: பாஸ்போர்ட் வழங்கும் போது மேற்கொள்ளப்படும் விசாரணையில் சென்னை போலீசாரின் பணி பாராட்டுக்குரியது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார். ‘பாஸ்போர்ட் வழங்குவதில்  போலீசார் மேற்கொள்ளும் சரிபார்ப்பு நடைமுறைகளில்  ஏற்பட்டுள்ள அண்மைக்கால  வளர்ச்சி’ தொடர்பான கருத்தரங்கு சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  நேற்று நடந்தது. க்ரைம் பிராஞ்ச் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி  வரவேற்றார்.

இந்த கருத்தரங்கை  மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் தொடங்கி வைத்தார். அப்போது, பாஸ்போர்ட் வழங்கும் பணிகளில் சான்றுகளை சரிபார்ப்பதில் போலீசாரின் முக்கியத்துவம் குறித்தும், அந்த பணியில் சிறப்பாக செயல்படும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலை, பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் பாராட்டினார்.

நிகழ்ச்சியின்போது 160க்கும் மேற்பட்ட சென்னை போலீஸ் அதிகாரிகள் பாஸ்போர்ட் சரிபார்ப்பு தொடர்பான விஷயங்களை கவனித்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் போலீசாருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான அறிக்கைகளை தயார் செய்வதில்  தற்போதுள்ள நடைமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கினர். இதில், ஐபிஎஸ் அதிகாரி அருண்சக்தி குமார் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: