எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை

ராமேஸ்வரம்: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 400-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

தலைமன்னார் மற்றும் நாச்சிக்கூடா பகுதிக்கிடையே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகை பறிமுதல் செய்து அதிலிருந்த 11 மீனவர்களையும் பிடித்து சென்றனர். ஒரு படகு பழுதடைந்து எல்லையை தாண்டிவிட்டதை அறிந்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்தவர்களை விடுவித்து அதிலிருந்த 5 மீனவர்களையும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர்.

தங்கச்சிமடத்தை சேர்ந்த தூதர் என்பவருக்கு சொந்தமான படகில் வந்த பாலமுருகன், அந்தோணி, தங்கபாண்டி, அஜித், கிருஷ்ணன், மடுக்குப்பிச்சை ஆகியயோரை கைது செய்த இலங்கை கடற்படையினர், தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: