இலங்கை நிலைமை குறித்து அனைத்துகட்சி கூட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும்: வைகோ பேச்சு

சென்னை: இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் வைகோ கூறினார். இலங்கை நிலைமை குறித்து ஆராய, நேற்று முன்தினம் மாலை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:தமிழர்களை நசுக்குவதற்காக ராணுவத்தை வலுப்படுத்தினார்கள். பல நாடுகளிலிருந்து ஆயுதங்களை பெற்றார்கள். ஈழத் தமிழர்கள் குடியிருப்பு முழுவதும் ராணுவ மயம்தான். சிங்கள ராணுவம் இனப்படுகொலை செய்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு சுயநிர்ணயம் வேண்டும். இவை எல்லாம் செய்தால்தான் இலங்கையில் அமைதி காண முடியும்.

Related Stories: