கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை தமிழகத்தில் 3 நாள் ராகுல்காந்தி நடைபயணம்: காங்கிரசார் வரவேற்க திட்டம்

சென்னை: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தி தமிழகத்தில் 3 நாள் நடைபயணம் மேற்ெகாள்கிறார். அவரது நடை பயணத்தில் ஏராளமான காங்கிரசார் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்து வருகிறது. அதன்படி ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து ‘பாரதத்தை இணைப்போம்’ என்ற பெயரில் 148 நாள் 3500 கி.மீ., தூர பாதயாத்திரையை தொடங்குகிறார். இந்த பாதயாத்திரை காஷ்மீர் வரை செல்ல திட்டமிட்டுள்ளார்.

இப்படியே இந்த பாத யாத்திரை காஷ்மீர் வரை நடக்கிறது. ராகுல்காந்தியின் பாதயாத்திரை தமிழகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. அக்டோபர் 2ம்தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் தமிழகம் வரும் அவர் கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பாதயாத்திரை புறப்படுகிறார்.2 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரை செல்கிறார். 3வது நாள் களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்கிறார். கேரள மாநில சுற்றுப்பயணத்தின்போது அவரது தொகுதியான வயநாட்டிலும் யாத்திரை செல்லும் வகையில் பயணப்பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: