வினாத்தாள் சர்ச்சை; யார் அந்த தவறை செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வினாத்தாள் சர்ச்சை குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும் அவர்களது அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார். ஆஸ்திரேலிய நாடு கல்வி, கலை, விளையாட்டு துறை அமைச்சர் டேவிட் சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை  சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்து குறித்து செய்தியாளர்காலியிடம் பேசிய அமைச்சர் பொன்முடி ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் உடன் நமது பல்கலைக்கழகங்கள் தொடர்பு படுத்தும் நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.

சேலம் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த அரசு இணை செயலாளர் இளங்கோவன் ஹன்றி தாஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும் அவர்கள் தாக்கல் செய்யும் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் தமிழகத்தில் கல்லூரிகளுக்கான கௌரவவிரிவுரையாளர்கள் TRP மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர் என்றார்.

Related Stories: