கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு, விரைவாக சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம்,  கனியமூரில் 12 வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில், மாணவ, மாணவிகளின் சான்றிதழ் தீவைத்து கொளுத்தியுள்ளனர். அந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை திருப்பி அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்ட நிலையில் அவற்றை திரும்ப வழங்க வருவாய்த் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும்,  முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நேற்று எ.வ.வேலு தலைமையில் பள்ளியை ஆய்வு மேற்கொண்டோம்.

நீதிமன்ற வழக்கு காரணமாக பெற்றோரை நேற்று நேரில் சந்திக்க முடியவில்லை என்று கூறினார். மறைந்த மாணவியின் தாய் M.com படித்துள்ள நிலையில், அவர் கேட்டுள்ளபடி அவருக்கு பணி வழங்குவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். அருகில் உள்ள தனியார் பள்ளிகள் சக்தி பள்ளிக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். இன்று காலை 10.30 க்கு முதல்வர் வீடியோ கண்ணொளியில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கலவரம் திட்டமிட்டு நடைபெற்றது என்றும் கோபத்தில் ஏற்படவில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உட்பட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளன.  

வருவாய் துறை மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்து வருவதாகவும், மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி எளிதில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாமல் இருப்பது தொடர்பாக முதலமைச்சருக்கு அறிக்கை வழங்க உள்ளதாக அமைச்சர் கூறினார். அந்த பள்ளியின் அருகே 5 அரசு பள்ளிகள், 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரிகள் உள்ளது. இதை அந்த மாணவர்களுக்கு பயன்படுத்த முடியுமா என முதல்வரிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Related Stories: