ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி!: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறாரா நத்தம் விஸ்வநாதன்?

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் பிரச்னை நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 11ம் தேதி வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தினர். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். கலவரத்தில் ஈடுபட்ட எடப்பாடி, பன்னீர் ஆதரவாளர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் தற்போது நத்தம் விஸ்வநாதன் துணை பொதுச் செயலாளராக உள்ளார். எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பான பரிந்துரையை சட்டப்பேரவை தலைவருக்கு அதிமுக விரைவில் அளிக்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதனை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: