பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரியத்தினர் நாளை காத்திருப்பு போராட்டம்: தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மின் வாரிய வட்ட மண்டல அலுவலகங்கள் மற்றும் தலைமையகம் ஆகிய இடங்களில் நாளை காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் அளித்த பேட்டி: தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும். அரசு ஆணை 100 தொடர்பாக தமிழக அரசின் உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். 2022 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியை வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பை அனுமதிக்க வேண்டும்.

மின்வாரிய ஆணை 2 நாள் 12.4.2022ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர்மாறுதல் உள்ளிட்ட இதர சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு 20ம் தேதி (நாளை) அனைத்து மின் வாரிய வட்ட மண்டல அலுவலகங்கள் மற்றும் தலைமையகம் ஆகிய இடங்களில் காத்திருப்பு போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.

Related Stories: