செங்கல்பட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைப்பெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி துவங்கும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் 10ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், இவ்விளையாட்டு குறித்து  மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் விதமாக செங்கல்பட்டு நகராட்சி சார்பில், பள்ளி மாணவர்கள் செஸ் விளையாட்டு குறித்த வாசகங்கள் அடங்கிய ஆடையை அணிந்தவாறு சைக்கிள் பேரணி நடத்தினர். இப்பேரணியை, நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து செஸ் விளையாட்டு குறித்த வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மல்லிகா வானத்தில் பறக்க விட்டார். இந்நிகழ்வில், நகராட்சி மன்ற துணைத்தலைவர் அன்புச்செல்வன், பொறியாளர் நாகராஜன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ்கண்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: