கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக வெடித்த வன்முறை; உயர்நீதிமன்றம் DGP-க்கு அதிரடி உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி  ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் வன்முறையாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று DGP-க்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் மறு உடற்கூறைய்வு  நடத்த மருத்துவர்கள் குழுவை அமைத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மனைவி ஸ்ரீமதி உடலை மறு உடற்கூறைய்வு செய்ய கோரி மாணவி யின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

அப்பொழுது மாணவி தந்தையின் சார்பாக ஆஜர் ஆன வழக்கறிஞர் சங்கரன் சுபு பழைய மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று நாங்கள் பொறுப்பல்ல என்று அவர் பதிலளித்தார். அப்பொழுது குறிப்பிட்ட நீதிபதி மாணவர்களின் சான்றிதழ் எரிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் வாகனங்கள் தீக்கரை ஆக்கப்பட்டுள்ளான. தனிப்படை அமைத்து அடையாளம் காணுங்கள். வன்முறைக்கு பின்னணி யார் யார் தூண்டிவிட்டது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி காவல்துறை இடம் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்துங்கள் என்று உத்தரவிட்டார்.

வழக்கை இந்த நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கூறிய நீதிபதி, சான்றிதழ் எரிக்கப்பட்ட  மாணவிகளுக்கு என பதில் என்று கேட்டார். இது திட்டமிட்டு நடவடிக்கை என்று குறிப்பிட்ட நீதிபதி மாணவர்களின் சான்றிதழை எரிக்க யார் உரிமை கொடுத்தது? இது திடீர் கோவத்தில் வெடித்த வன்முறை அல்ல என்றும் திட்டமிட்ட சம்பவம் என்றும் தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிக்கொண்டு இருந்த நிலையில் அந்த நம்பிக்கையை புரட்டி போட்டுள்ளீர்கள் என்று கூறிய நீதிபதி சதிஷ் குமார். வன்முறையாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று DGP-க்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: