கேரளாவில் தீவிரவாதிகள் சேர்ப்பு 3 வாலிபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை: என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இளைஞர்களை சேர்த்த 3 பேருக்கு என்ஐஏ நீதிமன்றம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சென்று, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக பரபரப்பு தகவல் ஏற்படுத்தியது. பின்னர், இவர்களில் பலர் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இது குறித்து   தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இதில், கேரள மாநிலம், கண்ணூர் வளபட்டணம் பகுதியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஒரு கும்பல் ஆட்களை தேர்வு செய்ததாக மிதிலாஜ் (31), ஹம்சா (61) மற்றும் அப்துல் ரசாக் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், மிதிலாஜ், ஹம்சாவுக்கு 7 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், ரசாக்குக்கு 6 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.

Related Stories: