எழும்பூர், பிராட்வே, சேத்துப்பட்டு பகுதிகளில் இன்று முதல் 18ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் தகவல்

சென்னை: ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை-வானல்ஸ் ரோடு சந்திப்பு அருகில் பிரதான குழாய்கள் மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்வதால் இன்று முதல் 18ம் தேதி வரை எழும்பூர், பிராட்வே, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையில் வானல்ஸ் ரோடு சந்திப்பு அருகில் மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால், இந்த இடத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் பிரதான குழாய்கள் சென்னை குடிநீர் வாரியத்தால் இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால், இன்று காலை 10 மணி முதல் 18ம் தேதி காலை 10 மணி வரை பகுதி-5க்குட்பட்ட வேப்பேரி, பெரியமேடு, பார்க்டவுன், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கொண்டித்தோப்பு, சவுகார்பேட்டை, ஏழுகிணறு, ஜார்ஜ்டவுன், பிராட்வே, புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி, பகுதி-6க்குட்பட்ட பெரம்பூர், புளியந்தோப்பு, நம்மாழ்வார்பேட்டை, புரசைவாக்கம், செம்பியம், ஓட்டேரி, பகுதி-8க்குட்பட்ட கெல்லீஸ், அயனாவரம், கீழ்ப்பாக்கம் தோட்டம், சேத்துப்பட்டு, டி.பி.சத்திரம், மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் குழாய் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள கீழ்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். பகுதி-5க்கான பகுதிப் பொறியாளரை 8144930905 என்ற எண்ணிலும், பகுதி-6க்கான பகுதிப் பொறியாளரை 8144930906 என்ற எண்ணிலும், பகுதி-8க்கான பகுதிப் பொறியாளரை 8144930908 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: