செங்கல்பட்டில் உள்ள தோட்டக்கலை துறை கடைகள் ஏலம்: துணை இயக்குநர் தகவல்

செங்கல்பட்டு:  தோட்டக்கலை துறைக்கு சொந்தமான கடைகள் மாத வாடகைக்கு விடுவதற்கான ஏல விபரம் பற்றி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் தே.சாந்தா செலின் மேரி அறித்துள்ளார். இது தொடர்பாக சாந்த செலின் மேரி வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு டவுன் அண்ணாசாலை மார்க்கெட் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில்  இரண்டு கடைகள், முதல் தளத்தில் 2 கடைகள் மற்றும் இரண்டாம் தளத்தில் 2 கடைகள் ஆக மொத்தம் 6 கடைகள் கட்டப்பட்டு உள்ளது. இவற்றில் தரை தளத்தில் ஒரு கடையில் தோட்டக்கலை துறையின் மூலம்  விவசாயிகளின் விளைபொருட்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்கள் ஆகியவற்றை நேரடி விற்பனை செய்ய டான்ஹோடா விற்பனையகம் என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றது. இதில், 5 கடைகளை  மூன்று வருடத்திற்கு வாடகை விட  தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.

மூன்று வருடத்திற்கு மாதாந்திர வாடகைக்கு கடைகளை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்களுக்கு  இதற்கான விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் வரும் 25ம் தேதி வரை விநியோகம்  செய்யப்பட்டுகிறது. விவரங்களை, தோட்டக்கலை துணை இயக்குநர், செங்கல்பட்டு (இருப்பு) அரசு தோட்டக்கலை பண்ணை, ஆத்தூர் அலுவலகத்தில் விண்ணப்ப நிபந்தனைகள் மற்றும் படிவம் ஆகியவற்றை ₹300/- செலுத்தி நேரில் பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: