வேளாண் நலத்துறை திட்டங்களுக்கு கூடுதல் நிதி: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வேளாண் நலத்துறை திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநில வேளாண் அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகம், கர்நாடக மாநிலத்தின் வேளாண்மைத் துறையுடன் இணைந்து தேசிய அளவிலான மாநில வேளாண் அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது.

ஒன்றிய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டின் சார்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி மற்றும் வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், வேளாண்மை - உழவர் நலத்துறை தொடர்பாக மின்னணு வேளாண்மை, பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டம்  போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாநில வேளாண் அமைச்சர்களின் மாநாட்டில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டங்களுக்கு போதிய முன்னுரிமை கொடுத்து கூடுதல் நிதி உதவி வழங்கிடவும் மற்றும் கூடுதலாக ரசாயன உரங்களை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்து வழங்கிடவும் கோரிக்கை வைத்தார்.

Related Stories: