75வது படத்தில் நயன்தாரா

சென்னை: தென்னிந்திய மொழி படங்களை தொடர்ந்து, இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. தற்போது அவரது 75வது படம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸீ ஸ்டுடியோஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ், நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இயக்குனர் ஷங்கர் உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை நயன்தாராவிடம் சொன்னவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான வேடங்களில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கின்றனர்’ என்றார்.

Related Stories: