ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (One Stop Centre) பணிபுரியும் பணியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி (Refresher Training) இன்று (12.07.2022) சென்னையில் நடைபெற்றது. இந்த புத்தாக்கப் பயிற்சியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, சிறப்புரையாற்றி, பணியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ஷம்பு கல்லோலிக்கர், இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநர் திருமதி த.ரத்னா, இ.ஆ.ப., மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் 38 மாவட்டங்களில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: