நெமிலி தாலுகாவில் 1000 ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி-கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்க கோரிக்கை

நெமிலி : நெமிலி தாலுகாவில் 1000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த  4 மாதங்களுக்கு முன்பு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டது. கடந்தாண்டு மற்றும் தொடர்ந்து பெய்த  கனமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தது.

இதனால் நெமிலி பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது சுமார் 300 ஏக்கர் வரை நவீன இயந்திரத்தின் மூலம் நெல்மணிகளை அறுவடை செய்துள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெமிலி தாலுகாவில் அதிக இடங்களில்  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் தமிழக விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: