அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு

சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராமசாமி தீர்ப்பளித்துள்ளார். அதிமுகவில் சமீபமாக ஒற்றை தலைமை பிரச்னை விஸ்ரூபம் எடுத்துவந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் இரு தரப்பு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். அதிமுக கட்சி விதிகளுக்குட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும். கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் இதுகுறித்து நீதிபதி, இந்த பொதுக்குழு கூட்டம் நடத்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும், இது உட்கட்சி விவகாரம் என்றும் கூறினார். கடந்த 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கும் இதே உத்தரவை பிறபித்தார் நீதிபதி கிருஷ்ணராமசாமி. அதாவது, பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. அதிமுக உட்கட்சி விவகாரங்களில் ஈடுபட முடியாது. யூகத்தின் அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறினார். கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, சுமார் 5 கேள்விகளை எடப்பாடி தரப்பில் முன்வைத்தார். இது தொடர்பாக எடப்பாடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயநாராயணன், இந்த பதவிகள் 2-ம் காலியானதால், அது காலாவதியாகி விட்டது என கூறினார்.

இதனை தொடர்ந்து மற்ற கேள்விகளுக்கும் பதில் அளித்த வழக்கறிஞரின் பதிலை நீதிபதி ஏற்றக்கொண்டார். மேலும் உச்சநீதிமன்றம், கட்சி உள்விவகாரங்ககளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தது. மேலும் பொதுகுழுவுக்கு தான் அதிகாரம் முழுமையாக உள்ளது. அதாவது, 5ல் 1 பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட கேட்டுக்கொண்டால், கட்டாயம் கூட்ட வேண்டும்; பொதுகுழுதான் உட்சபட்ச அதிகாரம் படைத்தது என்று ஈபிஎஸ் தரப்பில் வாதமாக இருந்தது. ஓபிஎஸ் தரப்பில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே பொதுக்குழுவைக் கூட்ட அதிகாரம் உள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால், ஓபிஎஸ்-ன் வாதம் நிராகரிக்கப்பட்டு, ஈபிஎஸ்-ன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் ஆவதற்கான முன்னோட்டமாக பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகிறார். அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றபடவுள்ள 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories: