நங்கநல்லூரில் ஸ்கேட்டிங் மூலம் தூய்மை விழிப்புணர்வு பேரணி

ஆலந்துார்: நங்கநல்லூரில் ஸ்கேட்டிங் மூலம் தூய்மை விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆலந்தூர் 12வது மண்டலம் 167வது வார்டு சார்பாக தூய்மை பகுதிக்கான விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடந்தது. கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் தலைமை வகித்தார். மண்டல உதவி செயற்பொறியாளர் ஹார்ட்டின் ரொசாரியோ, எஸ்.எம்.எஸ். ஸ்கேட்டிங் கிளப் நிர்வாகி சஞ்சீவி முன்னிலை வகித்தார். பேரணியை ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியின்போது மாணவர்கள் நம் குப்பை நம் பொறுப்பு, சுற்றுச்சூழலை பாதுகாப்போம், மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்து கொடுப்போம் என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் எழுதியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இந்த ஸ்கேட்டிங் பேரணி நடந்தது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கலந்து கொண்டனர். இதில் தனியார் நிறுவன மேலாளர் சங்கர், திமுக நிர்வாகிகள் ஜெ.நடராஜன், ஏசுதாஸ், ரமணா, பிரான்சிஸ், மீன்மோகன், சதீஷ், ராஜ்கோபி, நலச்சங்க நிர்வாகிகள், ராமாராவ், அய்யம்பெருமாள், குமாரவேலு, அப்பலோ சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: