காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் அதிகமாக கிடைத்த பெரிய வகை மீன்கள்; முதல் நாள் நள்ளிரவு முதலே ஆரம்பமான மீன் விற்பனை

சென்னை: காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் பெரிய வகை மீன்கள் அதிகமாக கிடைத்தன. இதனால் மீன் வாங்க வந்த அசைவப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை காசிமேட்டில் விடுமுறை தினமான நேற்று அசைவ பிரியர்கள் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்காக கூடினர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன் விற்பனை கூடத்திற்கு அசைவ பிரியர்கள் ஏராளமானோர் வருவது வழக்கம்.அதேபோன்று சென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற பெரிய விசைப்படகுகள் நேற்று அதிகமாக கரைக்கு மீன் விற்பனை செய்வதற்காக திரும்பி வந்துள்ளது.

இதனையடுத்து நள்ளிரவு முதலே மீன்களை வாங்க மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் மீன்களை வாங்குவதற்காக கூடியதால் காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் நேற்று அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியதுகாசிமேட்டில் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடந்த சில வாரங்களாக பெரிய மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று வஞ்சிரம், வவ்வால், பாறை, களவான், மயில் கோலா உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் ஏராளமாக  விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே சிறிய வகை மீன்கள் மட்டும் அதிகமாக கிடைத்து வந்த நிலையில் இந்த வாரம் பெரிய வகை மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் அசைவு பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை சற்று ஏற்றத்துடன் காணப்பட்டாலும் கடலுக்குள் சென்று பிடிக்கப்பட்டு வந்த மீன்களை நேரடியாக விற்பனை செய்யப்படுவதால் அசைவ பிரியர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.வவ்வால், வஞ்சிரம் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் கடந்த வாரத்தை விட கிலோ ரூ. 100 முதல் 200 வரை அதிகமாகவே விற்பனையானது . சிறியவகை சங்கரா, கொடுவா, பாறை போன்றவை 100 முதல் 150ருபாய் வரை விற்பனையானது.

மீன்களின் விலை

விவரம்: வஞ்சிரம் கிலோ ரூ. 1300 முதல் 1600, கொடுவா கிலோ ரூ.800, வவ்வால் ரூ.700 முதல்900 வரையிலும் சங்கரா 500 முதல் 650 வரையிலும் கடம்மா கிலோ ரூ.400க்கும்,  நெத்திலி கிலோ 300க்கும், இறால், நண்டு போன்றவை 350 முதல் 500 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: