தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தது சிபிஐ

டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்கை சிபிஐ பதிவு செய்யப்பட்டுள்ளது. பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை கசியவிட்டதாகவும், குறிப்பிட்ட சில நபர்களுக்கு சாதகமாக செயல்பட்டு உதவியதாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றம் சாட்டப்பட்டது.

 இந்த ஊழல் வழக்கில் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழும அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதனையடுத்து அவர்கள் இருவரையும்  திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில்,சித்ரா ராமகிருஷ்ணன் மீதும், மும்பை நகர முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே மீதும் சிபிஐ மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.  2009-17-ம் ஆண்டு வரை பங்குச்சந்தை ஊழியர்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக கூறி அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

Related Stories: