கும்பகோணம் அருகே மலையப்பநல்லூரில் நேற்று நடந்த வயல் திருவிழாவில் நெல் வயலில் திருவள்ளுவரின் உருவ நடவு: விவசாயி இளங்கோவன் அசத்தல்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், மலையப்பநல்லூரில் உலகின் முதன்முதலாக இயற்கை விவசாயம் பாரம்பரிய நெல்லுக்கு மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வயல் திருவிழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் நெல் வயலில் நடவு செய்யப்பட்டுள்ள, உழவுக்கென்று திருக்குறளில் தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரின் உருவ நடவு வயலை இயற்கை விவசாயி இளங்கோவன் என்பவர் நேபால் மாநிலத்தில் உள்ள சின்னார் என்ற நெல் ரகத்தினாலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தினாலும், நீளம் 50 அடியும், அகலம் 45 அடியும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் நடவு செய்துள்ளார்.

இந்த உருவ அமைப்பின் நீளம் 50 அடியும், அகலம் 45 அடியும் ஆகும். இதனை கழுகு பார்வையில் பார்க்கும்போது திருவள்ளுவர் அமர்ந்திருக்கும் நிலையிலான முழு உருவத்தை காட்டுகிறது என்பது சிறப்பம்சம். இந்த உருவ நடவினை விவசாயி இளங்கோவன் உலகத்திலேயே முதன்முதலாக செய்திருப்பது பெருமைக்குரியதாகும்.

Related Stories: