இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:

தமிழக பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி; அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்த ‘‘திராவிடமணி” இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: