அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்.!

சென்னை: அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள பெருந்தலைவர் காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும், ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருட்களால் ஏற்படும் சுகாதாரக்  கேடுகள்  மற்றும்  அதனை  தடுக்கும்  முறைகள்  குறித்தும், கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள், வணிக வளாகங்கள், வணிக அங்காடிகள், பொதுமக்கள் பெருவாரியாக கூடும் இடங்கள் போன்ற  இடங்களில் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்தும், ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருட்களால் ஏற்படும் சுகாதாரக்  கேடுகள்  மற்றும்  அதனை  தடுக்கும்  முறைகள்  குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பெருந்தலைவர் காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் இன்று (07.07.2022) நடைபெற்றது. இம்முகாமில் இந்தப் பள்ளியில் மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமினை பெருநகர சென்னை மாநகராட்சி  சுகாதார  நிலைக்குழு  தலைவர்   டாக்டர் கோ. சாந்தகுமாரி அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இம்முகாமில் கோவிட்-19 தொற்று எவ்வாறு பரவுகிறது, அதனை தடுக்கும் முறைகள் மற்றும் முறையாக முகக்கவசம் அணியும் முறைகள், சோப்பு உபயோகித்து 20 நொடிகள் கைகழுவுவதன் அவசியம், டெங்குக் காய்ச்சல்  எவ்விதம் பரவுகிறது,  அதனை தடுக்கும் முறைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக் கூடிய நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார கேடுகள், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் மாணவியர்கள் அனைவருக்கும் துணிப்பைகள் வழங்கப்பட்டன. IEC வாகனம் மூலம் காணொலி காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுகாதார கல்வி அலுவலர் முனைவர் டி.ஜி.சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலர் டாக்டர். ஜி.ஷீலா, துப்புரவு அலுவலர் திரு. கேசவன், தலைமையாசிரியை திருமதி எஸ்.வனிதா ராணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: