வேலையில்லாத இளைஞர்களை குறிவைக்கும் நிறுவனங்கள் சென்னையில் அதிகரித்து வரும் ஆண் பாலியல் தொழிலாளர்கள்: 3 ஆண்டுகளில் வாழ்க்கையை தொலைக்கும் அவலம்

சென்னை: வேலையில்லாத இளைஞர்களை குறிவைக்கும் நிறுவனங்களால், சென்னையில் ஆண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், 3 ஆண்டுகளில் இளைஞர்கள் உடல், மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையை தெரிவித்துள்ளனர். கலாச்சார சீர்கேட்டின் ஒரு பகுதியாக பெரு நகரங்களை தொடர்ந்து தற்போது சென்னையிலும் ஆண் பாலியல் தொழில் கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த தொழிலில் யாரும் அவ்வளவு எளிதில் தொடங்க முடியாது. இதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கிறதாம்.

அந்த வகையில், வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து பல நிறுவனங்கள் ‘கால்பாய்’ எனும் சேவையை சென்னையில் நடத்தி வருகின்றனர். வேலைதேடும் இளைஞர்கள் தொடர்ந்து அவர்கள் எந்தெந்த வெப்சைட்டுகளில் வேலை தேடுகிறார்கள் என்பதை பார்த்து அவர்களது பயோடேட்டாவை அலசி அவர்களது வயது, உயரம், படிப்பு உள்ளிட்டவை அனைத்தும் ஆராயப்பட்டு அதன்பின் அவர்களை மார்க்கெட்டிங் அல்லது பிசினஸ் என்ற பெயரில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கின்றனர். அதில், நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ள நபரின் குடும்ப சூழ்நிலையை கேட்டறிந்து, கஷ்டப்படும் அல்லது ஆடம்பரத்தை விரும்பும் நபர், செலவாளி ஆகியோரை தேர்வு செய்கின்றனர்.

தேர்வான நபரை, பெண் கஸ்டமரை அணுகி அவரிடம் நமது மார்க்கெட்டிங் சம்பந்தமாக ஒரு கையெழுத்து பெற்று வரவேண்டும். அவர்களில் சிலர் உங்களிடம் அத்துமீறினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். அட்ஜெஸ் செய்து கொள்வேன் என்று கூறும் நபர்களை உடனே தேர்வு செய்கின்றனர். அனுமதிக்க மாட்டோம் என்பவர்களை நேர்முகத் தேர்வில் தோல்வி என்று கூறி அனுப்பி வைத்து விடுகின்றனர்.

பின்னர், அட்ஜெஸ் செய்து கொள்வேன் என்று கூறும் நபர்களை, பிசினஸ் என்ற பெயரில் ஒரு முகவரியை கொடுத்து இந்த பெண்ணை பார்த்து ஆவணங்களில் கையெழுத்து வாங்கி வாருங்கள் என்று அனுப்பி வைக்கின்றனர். தொடர்ந்து, அந்த பெண்ணிடம், நீங்கள் செலக்ட் செய்த நபரை அனுப்பி உள்ளேன், அவரை உங்கள் ‘இச்சைக்கு’ பயன்படுத்தக் கொள்ளுங்கள் என்று நேர்முகத் தேர்வு நடத்திய கம்பெனி நிர்வாகிகள் ஓபனாக தெரிவிக்கின்றனர். முதல் தடவையில் தேர்வர் பாஸாகி விட்டார் என்றால், தொடர்ந்து கால்பாய் வேலை சம்பந்தமாக அவரிடம் எடுத்துக் கூறி உங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை இந்த வேலையில் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி அவரை தங்களது நிறுவனத்தில் பணிபுரிய வைக்கின்றனர். குறிப்பிட்ட சில மாதங்கள் கடந்த பின்னரே நாம் வேலைக்கு வந்தது பாலியல் தொழில் எனப்படும் கால்பாய் வேலை என்பதை சில இளைஞர்கள் புரிந்து கொள்கின்றனர்.

அதுவரை மார்க்கெட்டிங் அட்வர்டைஸ்மென்ட், அட்ஜஸ்ட்மென்ட் என நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இளைஞர்களை மூளை சலவை செய்து தங்களது தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்களுக்கு கால்பாய் வேண்டும் என தெரிவிக்கும் பெண்களின் தகவல்கள் போன் நம்பர் இமெயில் ஐடி உள்ளிட்டவை மிகவும் ரகசியமாக நிறுவனங்கள் வைத்துள்ளன. அனைத்தும் இமெயில் மூலமாகவே தொடர்பு கொள்கின்றனர். இந்த நிறுவனங்களின் நம்பிக்கை தன்மை குறித்து பெண்களுக்கு அதிக நம்பிக்கை வருவதோடு குறிப்பிட்ட அந்த பெண்கள் தங்களது நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து தற்போது சென்னையில் நாளுக்கு நாள் கால்பாய் சேவை அதிகரித்து வருகிறது.

சில பெண்கள் ஒருநாள் என புக் செய்கின்றனர். சிலர் ஒரு வாரம், இன்னும் சிலர் ஒரு மாதம் என புக் செய்கின்றனர். அதற்கு ஏற்றார்போல் 5 ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சத்திற்கும் மேல் நிறுவனங்கள் பெண்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அதில் கிட்டத்தட்ட 40 முதல் 50 சதவீதத்தை கமிஷனாக பெற்றுக் கொள்கின்றனர். மீதி தொகையை கால்பாய் எனப்படும் ஆண்களுக்கு வழங்குகின்றனர். குறிப்பாக 20 வயதிலிருந்து 30 வயதுள்ள ஆண்கள் அதிகமாக இந்த வேலைக்கு எடுக்கப்படுகின்றனர்.

கால்பாய் இளைஞர்களை  பெண்கள் தேர்வு செய்யும் போது அவர்களது உடல் எடை, வெளி தோற்றம்  உள்ளிட்டவற்றை பார்த்து தேர்வு செய்கின்றனர். மேலும் அதிக நேரம் பெண்ணுடன் நெருக்கமாக செலவழிக்க வேண்டும் என்று பெண்கள் நிபந்தனை விதிப்பதால் கால்பாயாக செல்லும்  ஆண்கள் மது அல்லது மாத்திரைகளை உட்கொண்டு செல்கின்றனர். இதனால் மூன்று  ஆண்டுகளில் அவர்களது உடல்நிலை, மனநிலை முழுவதும் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை  தொலைத்து விடுகின்றனர்.

 ஒருகால கட்டத்தில் அதிக பணம் உள்ள பெண்கள் இந்த கால்பாய் எனப்படும் கலாச்சாரத்தை விரும்பிய காலம் மாறி தற்போது கணவனை இழந்தவர்கள், உயர் பொறுப்பில் உள்ளவர்கள், ஐடி துறையில் உள்ளவர்கள் என பலரும் தங்களது உடல் தேவையை தீர்த்துக் கொள்ள இந்த கால்பாய் எனப்படும் இளைஞர்களை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

போலி நிறுவனங்கள்

போலி நிறுவனங்கள் ‘வீக்கான’ நபர்கள் விண்ணப்பிக்கும்போது, கால்பாய் வேலைக்கு 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் வாங்குகின்றனர். இளைஞர்கள் கடன் வாங்கி பணத்தை கட்டியவுடன் அவர்களுடனான தொடர்பை நிறுவனங்கள் துண்டித்து விடுகின்றன. இது குறித்து போலீசில் புகார் செய்ய முடியாது என்பதால், மோசடி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி சம்பாதித்து வருகின்றன.

3 பிரிவுகளில் தேர்வு

கால்பாய்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் அவர்களை இன்டர்நேஷனல், நார்மல், லோ மூன்று வகையாக தரம் பிரிக்கின்றனர். மூன்று பிரிவுகளின் கீழ் ஆண்களை தேர்வு செய்கின்றனர். அதற்கு ஏற்ப தொகையை புக் செய்யும் பெண்களிடம் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் இன்டர்நேஷனல் பிரிவில் உள்ள ஆண்களுக்கு 50 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுகின்றன.

சிறார்களும் தப்பவில்லை

சென்னையில் கால்பாய் வேலைக்கு 16 வயது முதல் 20 வயது உள்ள சிறார்கள் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள படிப்பறிவு இல்லாத சிறார்களை சில நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை அவர்களுக்கு தருகின்றனர். இதன் மூலம் சில பெண்கள் சிறுவர்கள்தான் வேண்டுமென நிறுவனங்களிடம் கேட்கின்றனர். அவ்வாறு கேட்கும் பெண்களிடம் 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை பெற்றுக்கொண்டு சிறுவர்களை மூளை சலவை செய்து அந்த பெண்களிடம் அனுப்பி மிகப்பெரிய தொகையை நிறுவனங்கள் சம்பாதித்து வருகின்றன.

இயற்கைக்கு மாறான விஷயம் என்றைக்கும் ஆபத்து; டாக்டர்கள் எச்சரிக்கை

பெரம்பூரை சேர்ந்த குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘உடலுறவுக்கு என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். நோயாளிகளில் சிலர் மருத்துவர்களின் உதவியோடு சில மருந்துகளை எடுத்துக்கொள்வது வழக்கம். சமீபகாலமாக விளம்பரத்தில் வரும் மாத்திரைகளையும், ஆன்லைன் மூலம் சில மாத்திரைகளையும் இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். இது சில சமயத்தில் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

மேலும் இந்த மருந்துகளால் சிலருக்கு இரண்டு வருடங்களிலிருந்து 5 வருடங்களுக்குள் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, உடலுறவு என்பதை அவர்கள் நினைக்கவே முடியாத நிலை ஏற்படும். திருமணமான ஒரு ஆண் தனது மனைவியுடன் எவ்வளவு நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது இயற்கையான விஷயம். அதை மீறி மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தினால், அது அவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றார்.

Related Stories: