மெரினா கடற்கரையில் 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 20 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்: காவல்துறை விளக்கம்

சென்னை: மெரினா கடற்கரையில் 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 20 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணிக்காக போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது. குற்றத்தடுப்பு பணிக்காக 4 ரோந்து வாகனங்கள் மெரினா கடற்கரை பகுதிகளில் சுற்றி வருகின்றன என்றும் நீரில் மூழ்கும் நபர்களை காப்பாற்றுவதற்காக பயிற்சி பெற்ற காவல்துறையினர் பணியில் உள்ளனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. .

Related Stories: