ரயில்களை மீண்டும் இயக்க கோரி பயணிகள் தலைகீழாக நின்று நூதன போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையம முன் ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று காலை 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழன் கணேசன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், ரயில் பயணிகள் சங்கம், மயிலாடுதுறை வர்த்தக சங்கம், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் தலைகீழாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

10 ஆண்டுகளாக இணைக்கப்படாத திருவாரூர் அகல ரயில் பாதையை மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் அனைத்து வழித்தடத்தோடும் இணைக்க வேண்டும், மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயிலை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும், மயிலாடுதுறை-திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கும் முடிவை கைவிட்டு திருநெல்வேலி வரை இயக்க வேண்டும், மயிலாடுதுறை-பெங்களூர் பாசஞ்சர் ரயிலை மீண்டும் உடனே இயக்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Related Stories: