காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம்; விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: திருவள்ளூர் கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை; பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம்  சமர்ப்பிக்கவேண்டும்.

இதுசம்பந்தமான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் 2.07.2022 நேற்று வெளியிடப்பட்டது. வருகிற 6.7.2022ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த அந்த நேரத்துக்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.விண்ணப்பங்களை திருத்தணி கல்வி மாவட்டம் deotiruttani@gmail.com,  திருவள்ளுர் கல்வி மாவட்டம்  deotir@nic.in, , ஆவடி கல்வி மாவட்டம்   deoaavadi@gmail.com@gmail.com, அம்பத்தூர் கல்வி மாவட்டம் deoambt@gmail.com, , பொன்னேரி கல்வி மாவட்டம் deopon@nic.in  என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: