ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை: திருவள்ளூர் கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், கருவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில், 2022ம் ஆண்டு ஓய்வூதியர்களுக்கான நேர்காணலையும் வீட்டில் இருந்தபடியே ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையையும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கிவைத்து கூறியதாவது; ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் நேர்காணல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்கும். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஓய்வூதியதாரர்க

ளுக்கான நேர்காணல், கடந்த 2020-2021ம் ஆண்டிற்கு நடைபெறவில்லை. தற்போது 2022 ம் ஆண்டிற்கான நேர்காணல் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில்கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்துக்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணையதளத்தினை பயன்படுத்தி இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையின் மூலமாக ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடி தபால்துறை பணியாளர் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் பதிவு செய்து நேர்காணல் செய்து கொள்ளலாம்.

அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம். ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி, நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம்’ என்றார்.

Related Stories: