ஆழியார் அருகே சிறுத்தை நடமாட்டம் தானியங்கி கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு

ஆனைமலை : ஆனைமலை அருகே உள்ள புளியங்கண்டி பகுதியில், விவசாய தோட்டத்தில், கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தானியங்கி கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி வன சரகம் ஆழியார் அருகே உள்ள புளியங்கண்டி பகுதியில் விவசாயி ரவி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்துக்குள் நுழைந்த சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த நாயை கடித்து கொன்றதாக தெரிகிறது. இதை அடுத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

தானியங்கி கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

 உடனடியாக கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: