புறநகர் பகுதியில் கஞ்சா விற்ற நைஜீரிய வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் காபி ஷாப்பில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 2019ல் நவம்பர் 19ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த 2 பேரிடம் 7 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இருவரையும் கைது செய்தனர்.

 விசாரணையில், நைஜீரியா நாட்டை சேர்ந்த அயோலுவா டேவிட் அடேபாகின் (20), ஒலுகு ஒலிசேமேகா இமானுவேல் (20) என்பதும், இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: