திருவண்ணாமலை அருகே தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே கடும் மோதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்குள் மோதலில் ஈடுபடும் காட்சி வெளியாகி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின்போது வணிகவியல், வேதியியல் ஆகிய துறைகளை சார்ந்த மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது, வெற்றி பெற்றவர்கள் மற்றொரு தரப்பினரை தரக்குறைவாக பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் இரு தரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் தடுத்து நிறுத்தி வெளியில் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்த வீடியோவானது இணையதளத்தில் வைரலாகி பரவி வரும் நிலையில், கல்லூரி நிர்வாகம் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டது.    

Related Stories: