கும்மிடிப்பூண்டி பெட்ரோல் பங்குகளில் பார்கோடு மூலம் பெட்ரோல் போடமறுப்பு: வாகன ஓட்டிகள் அவதி

கும்மிடிப்பூண்டி: பெட்ரோல் பங்குகளில் பார்கோடு மூலம் பெட்ரோல்போட மறுத்ததால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.  கும்மிடிப்பூண்டி தாலுகாவில் சுமார் 61 ஊராட்சிகளும் ஒரு பேரூராட்சியும் உள்ளது. இதில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் தேவைக்காக தினந்தோறும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் காய்கறிக்கடை, மளிகைக்கடை, கூல்டிரிங்ஸ்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு பார்கோடு மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்கிச் சென்று தங்களுடைய தேவைகளை பூர்த்திசெய்கின்றனர்.  அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு தேவையான பேன்சி, காலனிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குகின்றனர்.  தற்பொழுது அரசு சார்பாக டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அனைத்து கடைகளிலும் பார்கோடு, கூகுள் பே, போன் பே என டிஜிட்டலில் பணம் செலுத்துகின்றனர்.  அதேபோல தான் ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் கார், இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் கிராமப்புறங்களிலும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பாரத் பெட்ரோலியம், எச்பி உள்ளிட்ட பல பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகிறது.

குறிப்பாக இரண்டு நாட்களாக கும்மிடிப்பூண்டி அடுத்த கன்னியம்மன் கோயில் அருகே உள்ள தனியார் பங்குகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் பார்கோடு மூலமாக போடுவது வழக்கம் .எப்போதும்போல நேற்று சுமார் 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பார்கோடு மூலமாக பெட்ரோல் நிரப்ப வந்தபோது  பெட்ரோல் பங்க் ஊழியர்கள் திடீரென பார்கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டனர்.

இது சம்பந்தமாக இருசக்கர வாகன ஓட்டி ஒருவரிடம் கேட்டதற்கு, எங்கள் வங்கி கணக்கில் நீங்கள் செலுத்தும் பணம் வரவில்லை என கூறி அலட்சியமான பதில் கூறுகின்றனர். ஆனால் வாடிக்கையாளர் பார்கோடு மூலமாக பணம் செலுத்தி அதற்கான குறுஞ்செய்தி காண்பித்துவிட்டு தான் பின்பு வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர்.  அப்படியிருக்க இந்த அதிரடி பார்கோட் நிறுத்தத்தின் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர் என்றார்.  இது சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மேற்கண்ட பெட்ரோல் பங்க் மற்றும் இதர கடைகளுக்கு உடனடியாக நேரடியாக ஆய்வு செய்து ஒவ்வொரு கடைகளும் பார்கோடு மூலமாக பணம் செலுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: