பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம்!

உடுமலை: மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு மின்சார ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மின்மயமாக்கும் பணி முடிந்ததையடுத்து, கடந்த மாதம் மின்சார இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து, நேற்று மின்சார இன்ஜினில் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பழனியில் இருந்து உடுமலை வழியாக கோவைக்கு, ஆய்வாளர் பொன்னுசாமி மேற்பார்வையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த ரயில் பழனியில் இருந்து புறப்பட்டு, உடுமலைக்கு காலை 11.10 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் பொள்ளாச்சி புறப்பட்டு சென்றது. தற்போது இவ்வழித்தடத்தில் டீசலில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இனி, மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு மின்சார ரயில் இயக்க வேண்டும் என, உடுமலை பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: