மாதவரத்தில் 30 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் 27வது வார்டில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல காலமாக ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என கோரிக்கை  வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் கட்டமாக பெரியசேக்காடு பகுதியில் வருவாய்த்துறை சார்பில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்தவர்களின் நில ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு  இலவச வீட்டு மனை பட்டா  30 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி பெரியசேக்காடு பகுதியில் நேற்று நடைபெற்றது. மண்டலக்குழு தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு 30 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் சந்திரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: