சில்லறை விற்பனை விலை ரூ. 6.75 ஆனது; நெல்லையில் முட்ைட விலை மேலும் உயர்வு

நெல்லை: நாமக்கல்லில் வரலாறு காணாத அளவிற்கு முட்டை கொள்முதல் விலை ரூ. 5.50ஆக உயர்ந்ததையடுத்து நெல்லையில் இன்று ஒரு முட்டை மொத்த விற்பனை கடைகளில் ரூ. 6 ஆகவும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ. 6.50 முதல் ரூ. 6.75 வரையிலும் விற்பனையானது. தேசிய முட்ைட ஒருங்கிணைப்பு குழு முட்டை விலையை நிர்ணயம் ெசய்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் முட்ைட கொள்முதல் விலை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் பண்ணை கொள்முதல் விலையாக ஒரு முட்டை ரூ. 5.35ல் இருந்து ரூ. 5.50 ஆக உயர்ந்துள்ளது. இது புதிய உச்சமாக கருதப்படுகிறது. இதன் எதிரொலியாக நெல்லையிலும் இன்று முட்டை விலை மேலும்  உயர்ந்தது.

முட்டை மொத்த விற்பனை கடைகளில் நேற்று வரை ஒரு முட்டை ரூ. 5.80ஆக இருந்த நிலையில் இன்று காலை ரூ. 6ஆக உயர்ந்தது. இதன் காரணமாக சில்லறை விற்பனை கடைகளில் ரூ. 6.50 முதல் ரூ. 6.75ஆக உயர்ந்துள்ளது. இதனால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏழைகளின் அசைவ உணவாக கருதப்படும் முட்டை விலையும் உயர்ந்துள்ளதால் அவர்கள் முட்டை நுகர்வை குறைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக கோழிப்பண்ணையாளர்களுக்கு முட்டை உற்பத்தியில் நஷ்டம் தொடர்ந்தது. கோழித்தீவனம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்த நிலையில் முட்டை விலை உயராமல் இருந்து வந்தது. ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு ரூ. 4.50 ஆக உள்ள நிலையில் வருவாய் குறைவாக உள்ளது.

நாள்தோறும் 5 கோடி முட்டை உற்பத்தி செய்துவந்த நிலையில் தற்போது 4.20 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, மூலப்பொருட்கள் விலை  உயர்வு, போக்குவரத்து செலவு காரணமாக விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி உள்ளதாக முட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: