கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் பொறுப்பேற்பு

சென்னை: எடப்பாடி, ஓபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நேற்று பொறுப்பேற்றார்.அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: நான் அதிமுகவின் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அந்த அடிப்படையில் வருகிற பொதுக்குழுவில் அந்த தீர்மானம் நிறைவேற்றக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, தமிழ் மகன் உசேன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவராக பதவியேற்றார்.

சுவீட் பாக்ஸ் வேஸ்ட்

அதிமுக பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளராகி விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி 750 சுவீட் பாக்ஸ்கள் வரை வாங்கினார். அதில், மாவட்ட செயலாளர்களுக்கு 3 சுவீட் பாக்ஸ், ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு 5 சுவீட் பாக்ஸ் என திட்டம் வைத்திருந்தார்.  ஆனால், அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி நினைத்தது நடக்காமல் போனது. இதனால், எடப்பாடியின் அனைத்து சுவீட் பாக்ஸ்களும் வேஸ்டாக போனது. இவ்வளவு சுவீட் பாக்ஸ் செலவு செய்தது அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க தானா என்ற கேள்வி தற்போது எடப்பாடி தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: