விஜயகாந்த் குறித்து அவதூறு டிஜிபியிடம் தேமுதிக புகார்

சென்னை: விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான  கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை பல்வேறு ஊடகவியலாளர்கள், விளம்பரம் பெறுவதற்காக, பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து குணமடைந்து தற்போது உடல்நிலை தேறிவருகிறார். அவரது உடல்நிலை தொடர்பான காணொலியால், ஆஸ்பத்திரியில் இறந்து போனார் என்று சொல்லும் அளவிற்கு கூட சென்று விட்டனர்.

இந்த கருத்து ‘டி டி இன்போ’ & ‘‘ஆர்ஆர் நியூஸ் யூ டியூப் சேனல்கள் மற்றும் தொலைக்காட்சி சேனலிலும் ஒளிபரப்பப்பட்டது. இதுபோன்ற தவறான மற்றும் தூண்டுதல் கருத்துக்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீர்குலைப்பதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  இதனால் விஜயகாந்தை பின்தொடர்ந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் இதுபோன்ற பொய்யான மற்றும் தூண்டுதல் கருத்துக்களைக் கேட்டு கொதிப்படைந்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையைப் பாதிக்கிறார்கள். எனவே, தயவு செய்து  தவறான கருத்தை வெளியிட்ட நபர்களை கண்டறிந்து  நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: