புழல் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்

புழல்: புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள தொட்டி நிரம்பி, அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதைத் தொடர்ந்து, அப்பகுதி மழைநீர் கால்வாய்களை சீரமைக்க மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி முழு கொள்ளளவு எட்டியது. தற்போது அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுற்றியுள்ள கன்னடபாளையம், வஉசி தெருவில் உள்ள குடியிருப்புகள் மற்றும் மழைநீர் கால்வாய்களில் தேங்கியுள்ளது.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை விரிவாக்கி, அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் சுற்றியுள்ள நகர் பகுதிகளில் தேங்கி நிற்பதை தடுக்கவும், இங்குள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: