ஆவடி புதிய ராணுவ சாலையில் கழிவுநீருக்குள் கால்வாய் பணி: தரமற்ற முறையில் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆவடி: ஆவடி புதிய ராணுவ சாலையில் 2 கிலோ மீட்டருக்கு இருபுறமும் ரூ10 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆவடி மாநகராட்சி எதிரில் கால்வாய் அமைக்கும் பணிக்கு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டப்பட்டு பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இதில் கழிவு நீர் தேங்கி இருக்கும் சூழலில். சிமெண்ட் கலவை வாகனத்தை கொண்டு வந்து வடிகால்வாயில் இருந்த கழிவுநீரில் கலவையை கொட்டி கால்வாய் அமைத்து வந்தனர்.

மேலும் கழிவு நீரில் கொட்டப்பட்ட கலவையை பணியாளர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றபடி சமப்படுத்தினர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `மழைநீர் கால்வாயில் கழிவுநீரை அகற்றாமல் சிமென்ட் கலவையை கொட்டி பணிகள் நடைபெறுகிறது’என்றனர்.

Related Stories: