தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு; பலத்த பாதுகாப்புடன் விடிய விடிய நடந்த விசாரணை

சென்னை: அதிமுகவில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 வரைவு தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்ற கூடாது என்று 2 நீதிபதிகள் கொண்ட உய்ரநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வின் உத்தரவு எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேற்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வில் அவசர வழக்காக நள்ளிரவிலையே விசாரிக்கப்பட்டது. இதற்காக சென்னை அண்ணா நகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்துக்கு நீதிபதி சுந்தர்மோகன் வந்துருந்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர்கள் அரவிந்பாண்டியன், திருமாறன், ராஜலஸ்மி ஆகியோரும்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜூகோபால், விஜயநாராயணன் ஆகியோரும் ஆஜராகினர். அந்தப்பகுதி முழுவதும் காவல் துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 1.40 மணிக்கு தொடங்கிய வழக்கின் வாதம் விடிய விடிய நடந்தது.

இரட்டைத்தலைமை என்பது கட்சியின் அடிப்படை கடனைப்பு என்றும் ஆனால் ஒற்றை தலைமை கொண்டுவர படலம் என்ற அச்சம் உள்ளதாகவும் மனுதாரர் சண்முகம் தரப்பில் குறிப்பிடப்பட்டது. உட்கட்சி விவகிரம் என்று கூறி தங்கள் கோரிக்கை நிராகரிக்க பட்டதாகவும் கட்சி விதிகள் மீறப்படால் நீதிமன்றம் தலையிடம் என்று சுட்டிக்காட்டப்பட்டது. 

Related Stories: