டிடிசிபி அனுமதி இன்றி கட்டுமான பணிகளை தொடங்க கூடாது: பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: டிடிசிபி அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை தொடங்க கூடாது. எனவே, அனுமதி அவசியம் என அமைச்சர் எ.வ.வேலு பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுப்பணித்துறையில் நடந்து வரும் கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா, முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், கோவை மண்டல தலைமை பொறியாளர் இளஞ்செழியன் உள்பட பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: புதிய கட்டிடம் கட்டும்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைப்படம், 2 லட்சம் சதுர அடிக்குமேல் இருந்தால், சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற்றுதான், கட்டிடங்கள் கட்ட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் தான் பொறுப்பேற்க வேண்டும். இனிமேல், புதிய கட்டிடங்கள் கட்டும்போது, முகப்பு தோற்றம் எழில்மிக்கதாக இருக்க வேண்டும், அதற்காகவே முதல்வர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள், மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள், நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகங்கள் ஆகியவற்றின் புதிய முகப்பு தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இனிமேல், கட்டப்படும் ஒவ்வொரு அலுவலகங்களும், இந்த முகப்பு தோற்றத்தின்படியே இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: